முஸ்லிம் தலமைகளை கொள்கை அடிப்படையில் ஒன்றினைக்க பல நிகழ்ச்சித் திட்டங்களுடன் NASPF (நஸ்ப்) லங்கா வின் பயணம் !!
இன்றைய இலங்கை அரசியலின் இறுக்கமான சூழ்நிலையில் முஸ்லிம் தலமைகல் தங்களின் சுய அரசியல் விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி மக்கள் நலனை முன்னிலைப் படுத்தி ஒன்றினைய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
ஏற்கனவே எம் அரசியல்வாதிகளுக்கிடையில் ஒன்றிணைந்த அமைப்பை உருவாக்க பல மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ஆனாலும் எதுவும் வெற்றியைத் தரவில்லை.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதன் தேவையை யாரும் மறுக்க முடியாது காரணம்:
1. முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கபடும் அச்சுறுத்தல்கள் சேறுபூசும் செயற்பாடுகள் உரிமை மறுப்புக்கள்.
2. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்காளர்களின் அதிகரிப்பும் சூழ்ச்சிகளும்.
3. முஸ்லிம் கட்சிகளுக்குள் பிரிவினையை உண்டாக்கி அவர்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் ஆக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதிகள்.
மேற்கூறிய விடயங்கள் தேசிய அரசியலிலிருந்து முஸ்லிம் கட்சிகளுக்கும் சமூகத்திற்கும் விடுக்கப்படும் சவால்கள்.
மேலும் நமது முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் உள்ள உட் பூசல்கலால் தங்களின் செயலாளர்கள் வெவ்வேறு துருவங்களில் செயலற்று இருப்பது தங்களின் சுய லாப அரசியலை காட்டுவதுடன் சில பிரதேச வாதங்களை உருவாக்க அவர்கள் முயற்சிகள் எடுப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
முஸ்லிம் கட்சிகள் இன்னும் போட்டி அரசியலை தங்களுக்குள் நடத்துவது அவர்களின் எதிர்கால பிரதிநிதித்துவத்தைக் கூட இழக்க நேரிடும் குறிப்பாக அ.இ.ம.கா இம்முறை புதிய இடங்களில் பெற்றுக்கொண்ட ஆசனங்களை எதிர்வரும் தேர்தல்களில் மு.கா அங்கு போட்டி அரசியலை மேற்கொண்டால் இரு கட்சிகளுக்கும் எந்தவொரு பிரதிநிதித்துவமும் கிடைக்காத நிலை ஏற்படும்.
ஒற்றுமையை வலியுறுத்தக் கூடிய நாங்கள் பிரிந்து இருப்பதும் மாற்றுக் கட்சிகளின் ஒற்றுமையை பற்றிப் பேசுவதும் காலத்தின் கொடுமை.
நாங்கள் இணையத் தயார் நீங்கள் தயாரா ? பதிலுக்கு எங்கள் மாநாட்டில் நீங்களும் கலந்து கொள்ளலாம் என தலைமைக்கு தலமை அறிக்கை விடுவதும் அழைப்பிதழ் கொடுப்பதும் அரசியலில் நாகரீகம் என்றாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கையின் ஊடாக மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வென்றடுக்க கொள்கையளவில் கூட்டமைப்பை உண்டாக்கி செயற்படுவதையே மக்கள் நாகரீகமான அரசியலாக கருதுகிறார்கள்
அதாவுல்லா தலமையிலான கட்சி கூட இந்த இணைப்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும் காரணம் தனிப்பட்ட வாக்கு வங்கியை கொண்டுள்ள அவர் சென்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது தேசிய காங்கிரசின் வியூகமே தவிர அவர் இல்லை என்பதை இன்றைய சமூக ஊடகங்களில் மக்களின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
மு.காவின் ஆரம்பகால போராளியும் தகுதிவாய்ந்த செயலாளராகவும் இருந்த ஷேகு இஸ்ஸடின் அவர்கள் பிரிந்து கிடக்கும் இத் துருவங்களை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என NASPF லங்கா வேண்டுகிறது.
இன்றைய முஸ்லிம் அரசியல் கொள்கை கோட்பாடு சத்தியம் யாப்பு என்பதையல்லாம் கடந்து சென்றுவிட்ட நிலையில் இனியாவது நம் தலமைகல் இதய சுத்தியுடன் மக்கள் விரும்பும் ஒன்றினைவை ஏற்படுத்தாவிட்டால் இக் கட்சிகள் வரும் காலங்களில் துண்டாடபடுவதையும் பல புதிய கட்சிகள் தோற்றம் பெறுவதையும் தடுக்க முடியாது.
அதிகமான ஆன்மீக கருத்துக்களை அரசியலில் புகுத்தும் நம் தலமைகல் அரசியல் ஊடாக மக்களுக்கான விடியலை உண்டாக்கி தங்களின் மறுமை வாழ்கையின் விளை நிலங்களாக தங்கள் அரசியல் களத்தை பாவிக்க வேண்டும் எனவும் NASPF லங்கா வேண்டுகிறது.
எமது நிறுவனம் எதிர்காலத்தில் இவ் இணைப்பை வலியுறுத்தி நாடாளவிய ரீதியாக பாரிய நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் போன்றவற்றை முன்னடுக்க உள்ளது எனவே எல்லோரும் எங்களின்
இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என NASPF லங்கா பகிரங்கமான அழைப்பை விடுக்கிறது.
இறுதியாக இந்த ஒன்றினைவு நடக்குமா நடக்காதா இதில் NASPF லங்காவுக்கு வெற்றியா தோல்வியா என்பதை விட இது நடந்தால் அது மக்களின் வெற்றியாகவே கருதப்படும் அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்தக் கூட்டமைப்பை சாத்தியப்படுத்தி எங்கள் பயணத்தை இலகுவாக்கலாம்.
நன்றியுடன்
Naleem Pt செயலாளர்
Naspf Lanka
ஆலோசர்கள்
Marzook K Lebbe
YB Musthafa