ஜெர்மனியின் சர்வாதி காரியாக திகழ்ந்தவர் அடோல்ப்ஹிட்லர். இவர் முதலாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார். இவரது நாஜிப்படைகள் உலக நாடுகளை கலங்கடித்தது. இருந்தும் அவர் வீழ்ந்தார்.
ஹிட்லர் ஒருங்கிணைந்த ஹங்கேரியில் பிரான்னா ஆம் இன் என்ற இடத்தில் 1880-ம் ஆண்டு பிறந்தார். தற்போது இந்த இடம் ஆஸ்திரியாவில் உள்ளது. கடந்த 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மனியின் பெர்லினில் மரணம் அடைந்தார். தற்போது இவர் பிறந்த வீடு ஆஸ்திரியாவின் பிரான்னா ஆம் இன் பகுதியில் உள்ளது. அது ஒரு தனியாருக்கு சொந்தமாக உள்ளது.
எனவே அந்த வீட்டை ஹிட்லரின் நாஜிப் படை அனுதாபிகள் புனித தலமாக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதை தடுக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரியா அரசு இறங்கியுள்ளது. எனவே ஹிட்லர் பிறந்த வீட்டை விலைக்கு வாங்கி அரசு சொத்தாக மாற்ற நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.