சர்ச்சைக்குரிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கறுப்பு பணத்தை வைப்புச் செய்துள்ள தனிப்பட்ட நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் சீஸெல்சில் இலங்கை அரசாங்க வங்கியொன்றின் கிளை நிறுவப்பட்டதாகவும் நேரடி விமானப் போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணத்தை வைப்பிலிடுவதற்காக இவ்வாறு கடந்த அரசாங்கத்தினர் செயற்பட்டார்களா என்பது குறித்து விசாரணை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.