இலங்கை சிறையிலுள்ள நான்கு தமிழக மீனவர்கள் மற்றும் 84 படகுகளை விடுவிக்க, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பாரதப் பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இராமேஸ்வரத்திலிருந்து 5ம் திகதி மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீன்வர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது துரதிஷ்டவசமானது என்றும் ஜெயலலிதா கவலை தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை வசமுள்ள 4 மீனவர்களையும், 84 படகுகளையும் விடுவிக்க வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.