கடந்த 4 வருடங்களில் இலங்கை மருத்துவமனைகளில் 1200 இந்தியர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக சிறுநீரக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி லக்ஸ்மன் டயஸ் தெரிவித்துள்ளார்.
இன்றுகொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜராகிய வேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரபலதனியார் மருத்துவமனைகளில் கடந்த 4 வருடங்களில் 1200 இந்தியர்கள் தங்கள் சிறுநீரகத்தை தானம் செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியர்கள் தமது சிறுநீரகங்களை வழங்குவதற்காக இலங்கை சுகாதார அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச பொலிஸின் உதவியை நாடியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார்.