மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை – பசில் ராஜபக்சே

basil-rajapaksa
எதிர்க்கட்சியினருக்கு எதிராக மட்டுமே சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்… 

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எமக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் பொதச் சொத்துக்களை அழித்தாலும் எதுவும் நடப்பதில்லை. பொதுச் சொத்துக்கள் அழிக்கப்படுவதனை தடுப்பது அனைவரினதும் கடமையாகும். 

மாபொல உடற்பயிற்சி நடைபாதை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. 

தனிப்பட்ட ரீதியில் வீடுகளை எவரும் அமைக்க முடியும் எனினும், பொதுச் சொத்துக்களை அழிக்க முடியாது. 

இன்று பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. 

அரசியல் ரீதியான பழிவாங்கல்களை மேற்கொள்வதனைத் தவிர இந்த அரசாங்கத்திற்கு வேறு எதனையும் செய்ய முடியவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.