மினுவன்கொடையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறிய போது,
நாம் அனைவருடனும் இணைந்து செயற்படவே விரும்புகின்றோம். எனினும் அரசாங்கத்தின் எல்லா செயற்பாடுகளுக்கும் எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் முக்கியமான கருத்தை வெளியிட்டிருந்தார்.
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டது தெற்கு அடிப்படைவாதிகளின் செயல் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
சிவாஜிலிங்கம் போன்றவர்களிடம் விசாரணை நடாத்தக்கூடிய முதுகெலும்பு அரசாங்கத்திற்கு கிடையாது.
எமது எதிர்காலம் பாதுகாப்பற்றதாகவே காணப்படுகின்றது. எனவே எமக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது, அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளும் ஒர் பலவீனமான அரசாங்கமாகவே இந்த அரசாங்கத்தை கருத வேண்டும்.
மே தினக் கூட்டம் தொடர்பில் விசேட செயற்திட்டமொன்றை கூட்டு எதிர்க்கட்சி மேற்கொள்ளும். கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் பங்கேற்க எம்மால் முடியும்.
ஏனெனில் நாம் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.