இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

CRICKET-WT20-2016-ENG-WIS-FINAL

 

6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. அரை இறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

கோப்பையை வெல்ல போவது யார் என தீர்மானிக்க போகும் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

தொடக்க ஆட்டகாரர்களாக ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார்கள். கடந்த ஆட்டத்தில் அசத்திய ஜேசன் ராய் பத்திரி பந்தில் ஸ்டேம்பை பறிக்கொடுத்தார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ஹெல்ஸ் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி அதிர்ச்சியடைந்தது. அடுத்து களமிறங்கிய கேப்டன் மோர்கன் பத்திரி பந்தில் கேட்ச் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி கடும் பின்னடைவுக்கு உள்ளானது. 

இதனை அடுத்து இங்கிலாந்தின் நச்சத்திர வீரர் ஜோ ரூட்டும், ஜோஸ் பட்லரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சுலைமான் பென் வீசி ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ் அடித்து ரன் வேகத்தை கூட்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பட்லர் 34 ரன்கள் எடுத்திருந்த போது பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். 

 

ICC World Twenty20 India 2016: Final - England v West Indies

இதனால் அணியை காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பும் ஜோ ரூட் மீது விழுந்தது. ஆனால் மோசமான ஒரு ஷாட்டை விளையாடி 54 ரன்னில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ரூட் 54 ரன்கள் எடுத்தார், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராவோ, பிராத்வெயிட் ஆகியோர் 3 விக்கெட்களும், பத்திரி 2 விக்கெட்டும் விழ்த்தினார்கள். 

பேட்டிங்க்கு சாதகமான ஈடன் கார்டன் ஆடுகளத்தில் ஆக்ரோசமான வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிப் பெறமுடியும் என்ற நெறுக்கடியுடன் களமிறங்கியது இங்கிலாந்து. 

அனைவரையும் ஆச்சிரியப்படும் விதமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதல் ஓவரை ஜோ ரூட்டை பந்து வீச அழைத்தார். கெய்யில் களத்தில் இருந்ததால் அந்த ஓவரில் சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் கெயிலையும்(4), சார்ல்சையும்(1) ஆவுட் ஆக்கி அந்த அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை அழித்தார் ஜோ ரூட். 

ICC World Twenty20 India 2016: Final - England v West Indies
அதன் பிறகு களமிறங்கிய சிம்மென்ஸ் டக் ஆட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து சாமுவெல்சும், பிரவோவும் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ரன் வேகம் குறைந்தது. பிராவோ ஒரு சிக்ஸ் அடித்து அதிரடிய துவக்கிய உடனே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய ரசலும், சமியும் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரப்பரப்பு கூடியது. ஆனால் சாமுவெல்ஸ் ஒரு முனையில் நக்கூரம் போல் நின்று அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். கடைசி 6 பந்துகளில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார், பிராத்வெயிட் எதிர்க்கொண்டார். 

முதல் பந்தை லேக் சைடில் சிக்ஸ் அடித்தார். இதனால் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் சாய்ந்தது. ஆனால் அடுத்த பந்தும் சிக்ஸ்சுக்கு போக இங்கிலாந்து வீரர்கள் கலக்கம் அடைந்தனர். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தையும் சிக்ஸ் அடித்து இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவுக்கு முடிவுக்கட்டினார் பிராத்வெயிட். 

4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ். சாமுவெல்ஸ் 66 பந்துகளில் 85 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.