முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக கோதபாயவை பாராளுமன்றிற்கு அனுப்பி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.கோதபாய ராஜபக்ஸவுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதி செய்துள்ளார்.
கோதபாயவிற்கு முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் கட்சியில் என்ன பதவியை வழங்குவது என்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
கோதபாயவிற்கு பதவி வழங்குவது குறித்து விரைவில் முன்னாள் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தப்படும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.