பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை – பொன்சேகா

fonseka

 

தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் புதைக்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நந்திக்கடல் இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டது எனவும் எனினும், பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்டு அஸ்தி கடலில் வீசப்பட்டதாக மற்றுமொரு முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய இராஜதந்திரியுமான தயா ரட்நாயக்க கூறியதாக யாழ்ப்பாண பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பொட்டு அம்மானின் சடலமும் எரிக்கப்பட்டு அஸ்தில் கடலில் வீசப்பட்டதாகவும் தயா ரட்நாயக்கவின் தகவல்கள் பிழையானது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முழுமையாக அறிந்திராத விடயம் ஒன்று பற்றியே தயா ரட்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளதாகவும்  இறுதிக் கட்ட போரின் போது தயா ரட்நாயக்க யுத்த களத்தில் இருக்கவில்லை எனவும்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.