இனமத பேதங்களுக்கப்பால் எனது சுகாதார அமைச்சின் கடமைகளை முன்னெடுத்துச் செல்வேன்:அமைச்சர் நஸீர்

அபு அலா 

எனது சுகாதார அமைச்சின் கடமைகளையும், அபிவிருத்திகளையும், தொழில் வாய்ப்புக்களையும் வழங்குவதில் எவ்வித இனமத பேதங்களின்றி முன்னெடுத்துச் செல்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

gff_Fotor

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை நிலாமியா பாடசாலைக்கு ஒரு தொகுதி காரியாலய உபகரனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை (02) குறித்த பாடசாலையின் அதிபரிடம் கையளித்து வைக்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யாரும் யாருக்கும் எவ்வித பக்க சார்புகளும் காட்டி எந்த பாகுபாடுகளையும் யாருக்கும் காட்ட முடியாது. அதற்கமைவாகவே எனது சுகாதார அமைச்சில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று இனமத பாகுபாடுகள் காட்டி ஒருபக்க சார்பாக ஒருபோதும் நடப்பதும் இல்லை, நடக்கப்போவதும் இல்லை. இந்த விடயத்தினை எனது அமைச்சில் கடமையாற்றுகின்ற எல்லா உத்தியோகத்தர்களுக்கும் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

இலங்கைத் தீவில் வாழ்கின்ற எல்லா மக்களும் ஒரு தாய்பெற்ற மக்களாகவே நான் கருதுகின்றேன். அந்த வகையில் எனது அமைச்சினூடாக முன்னெடுக்கப்படுகின்ற சகல வேளைத்திட்டங்களையும் இனமதங்களுக்கு அப்பால் சுகாதார அமைச்சின் அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புக்கள் மற்றும் ஏனைய விடயங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றேன்.

விஷேடமாக யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் சுகாதாரத் துறையினை முன்னெடுப்பதில் மிகக் கூடிய கவனம் செலுத்தி வருகின்றேன் என்றார்.