குமார் குணரத்தினத்தின் குடியுரிமை விவகாரத்திற்கு பதிலளிக்குமாறு கோரி கொழும்பு பொரளையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்த முன்னிலை சோசலிஸகட்சியினர் அந்த அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதை தொடர்ந்து அவர்களிற்கும் பொலிஸாரிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் துமிந்த நாகமுவ நீதிமன்ற விசாரணை முடிவடைந்துவிட்டதால் அரசாங்கம் அவரின் பிரஜாவுரிமை குறித்த விடயத்திற்கு பதிலளிக்கவேண்டும், இது அரசியல் ரீதியான விடயம், சட்டரீதியானது அல்ல , இது எவரின் வாழ்க்கையும் பாதிக்ககூடிய விடயம் என தெரிவித்துள்ளார்.