தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் மக்களின் நலனை கருத்திற் கொண்டு மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம் அழித்து வருகின்றமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன், அவற்றை அழிப்பவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நலன் தரக்கூடிய திட்டங்களை கடந்த அரசாங்கம் மேற்கொண்டது எனவும் தற்போதைய அரசாங்கம் அதனை சீர்குலைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் – மஹிந்த:-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென கோருவதாகவும், அதிகாரத்தை பகிர வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது அமைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதற்காக அரசியல் சாசனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு போன்ற ஏனைய விடயங்கள் பற்றி பின்னர் கவனிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் மக்களின் நோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.