வாருங்கள் …ஒன்றாய் சுவாசிக்க..
பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் யாழ் பயணம் (ஓர் கண்னோட்டம்)
அஷ்ரப் ஏ சமத்
ஊடகங்களுக்கு சமூகத்தில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமென கடந்த 30 வருடங்களாக மிகத் தெளிவாக அறிந்திருந்ததுடன் சமுகத்தினுள் வேருன்றியுள்ள சில நம்பிக்கைகளுக்கும் கருத்தெண்ணங்களுக்கும் சவாலாக இருந்ததோடு அவற்றை மென்மேலும் செயற்பட வைக்கும் திறமை ஊடகங்களுக்கு உள்ளதென்பதை உலகம் ஏற்றுக் கொள்கின்றது.
கடந்த கால யுத்தத்தின்போது யுத்தம் முடிவடைந்த பி்னனரும் வடக்கிலும், கிழக்கிலும் நிலவிய யுத்தத்தின் உண்மையான தகவல்கள் மற்றும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களுக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பற்றி நாட்டு மக்களுக்கு மாத்திரமின்றி தெற்கில் உள்ள மக்களுக்கும் அறிந்து கொள்ள இயலாமற் போயிற்று. அல்லது அக் கால கட்டத்தில் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. உண்மையை எழுதிய 44 ஊடகவியலாளா்கள் கடந்த 10 வருடத்திற்குள் காணமல் போய் உள்ளனா். அதில் தெற்கினைச் சோந்த 3 ஊடகவியலாளா்கள் லசந்த விக்கிரமதுங்க மற்றும் எக்கினியகொட தவிா்ந்த ஏனைய 41 ஊடகவியலாளா்களும் வடக்கினைச் சோ்நதவா்களே. இவா்கள் கொலைசெய்யப்பட்டுள்ளாா்களா ? அல்லது காணமல் போகி உள்ளாா்களா என ஏங்கித் தவிக்கின்றனா் இவா்களின் சொந்தங்கள்..
தற்பொழுது வடக்கில் தேவைப்படுவதெல்லாம். வடக்கு மக்கள் மீளக் குடியமா்த்தி அம்மக்களினது காணிகள், வீடுகள், அரச தனியாா் கட்டிடங்களை பாடசாலைகள், மீளப் பெற்று அமைதியானதொரு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கே இ மக்கள் ஏங்கி நிற்கின்றனா். இருப்பினும் ஒவ்வொரு குடும்பத்திலும் தமது சொந்தங்கள், பந்தங்களை இழந்து அல்லது காணமால் போய் இருப்பது, சிறையில் வாடுவது வெளிநாட்டுக்குச் சென்று சொந்த மண்னுக்கு வராது அங்கே தங்கியிருப்பது, சொத்துக்கள் இழப்பீடுகளுக்கு அரசினால் நிவாரணம், சட்டம் ஓழுங்கு மற்றும் நீதி, நியாயம் கிடைக்காதா? குற்றமிலைத்தவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட மாட்டா்காளா ? எங்களுக்கு ஜனாநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவங்கள் இன்றும் தங்களது நெஞ்சில் இருந்து விட்டு அகலா வடுக்கலாக உள்ளது.
இதனை அங்கு பழகிய சந்தித்த வட பகுதி ஊடகவியலாளா்கள், பாதிக்கப்பட்ட சாதாரண பொதுமகளை அனுகியபோது அவா்களிடம் இருந்து வெளிவந்த கருத்துக்களைச் சொல்லியே எம்மிடம் கண்னீா் வடிக்கின்றனா். இங்கு ஒவ்வொரு குடும்பத்திலும் பல சோகக் கதைகள் புதைந்து கிடக்கின்றன. கனவன் ,மனைவி இழப்பு, தாய் மகன், மகள் இழப்புக்களை பெற்ற குடும்பங்களாகவே அனேகம் போ் உள்ளனா்.
இச் சம்பவத்தின் மறுபக்கம் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவா்கள் மற்றும் அவா்கள் தெற்கில் மத்திய வங்கி, தலதா மாளிகை குண்டுத் தாக்குதல் தொட்டு வெலிகமவில் நடாத்திய இறுதித் குண்டுத் தாக்குதல் வரையிலான உயிர், சொ்த்துக்கள், அரசியல் தலைவா்கள் இழப்புக்கள், பற்றியும் கருத்துக்கள் பறிமாறப்பட்டன. இறுதியில் ஓ“ இறைவா இந்த கொடிய யுத்தத்தினால் கருமேகங்களை விரட்டியடித்து ஒளிமயமானதோா் தரணியை ஏற்படுத்துவாயாக இரு சாரரும் சான்று பகருகின்றனா்.
முதல் முறையாக அரசின் ஊடக அமைச்சினால் ஓழுங்கு செய்யபட்டு – ஊடக அமைச்சா் தலைமையில் – தெற்கில் உள்ள 35க்கும் மேற்பட்ட அச்சு மற்றும் இலக்ரோணிக், சமூக ஊடக வலையத் தள நிறுவனங்களில் இருந்தும் மும்மொழிகளையும் பிரநிதித்துவப்படுத்தும் 98 ஊடகவியலாளா்கள் குழுவொன்றினை அழைத்துக் கொண்டு யாழ் தேவி வடக்கு ஊடகவியலாளா்களை இணைக்கும் பாலமாக யாழ் விஜயம் அமைந்திருந்தது..
கடந்த சனிக்கிழமை(26)ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஊடக அமைச்சா் கயந்த கருநாதிலக்க, மற்றும் பிரதியமைச்சா் கருநாரத்தின பரணவித்தாரண அமைச்சின் செயலாளா்கள்,தகவல் திணைக்கள அதிகாரிகள் அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களது தலைவா்களும் சாதாரண மக்களோடு மக்களாக யாழ் தேவியில் 3 புகையிரத பெட்டிகளில் பயணித்தனா். புகையிரதம் மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்தன. இடையில் குருநாகலில் புகையிரத நிலையத்தில் இருந்து வயம்ப ஊடகவியலாளா் சங்கம் வரவேற்பளித்து அங்கிருந்தும் 25 ஊடகவியலாளா்கள் இப் பயணத்தில் இணைந்து கொண்டனா், அத்துடன் அநுாராதபுர புகையிர நிலையத்தில் அமைச்சா் சந்திராணி பண்டார தலைமையில் அநுாராதபுரத்தில் வரவேற்பளிக்கபப்ட்டது.
வவுனியாவில் உள்ள தமிழ் சிங்கள ஊடக சங்கம் வரவேற்பின்போது பாரியதொரு குற்றச்சாட்டினை அமைச்சரிடம் முன்வைத்தனா். வடக்கின் ஒரு மாவாட்டம் வவுனியாவாகும் ஊடக அமைச்சினால் ஒழுங்கு செய்யப்படும் இவ் விஜயம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. வவுனியாவுக்கு தனியாக ஒரு நாளை ஒதுக்கி மீண்டும் பிரிதொரு தினத்தில் இஙகு வருகைதருமாறு அமைச்சரை வேண்டிக் கொண்டனா். இதனை அமைச்சா் ஏற்றுக் கொண்டாா்.
யாழ் புகையிரத நிலையத்தில் வைத்து அமைச்சா் விஜயகலாவும் மற்றும் யாழ் சுதந்திர ஊடகவியலாளா்கள் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டு ஊடகவியலாளா்களுக்கும் அமைச்சா் விஜயகலாவினால் பகற்போசனமும் வழங்கப்பட்டது. வடக்கு ஆளுணா் ரேஜினோல் குரே சந்திப்பு அதன் பின்னா் மதத் தலைவா்கள் சந்திப்பில் நல்லை ஆதீனம்,பிராதன சாமி சிறி சோமசுந்தர தேசிகா பரமச்சாரிகள் சுவாமிகள் யாழ் பள்ளிவாசலில் சந்திப்புகள் இடம் பெற்றன பள்ளிவாசலில் விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம்கள் பற்றி ஒரு ஊடக ஆவணம் தயாரிக்க உதவுமாறும் ஒரு மகஜரும் ஊடக அமைச்சரிடம் கையளிக்கபட்டது.
அத்துடன் பத்திரிகை ஸ்தாபணத்தினால் வடக்கு ஊடகவியலாகளுக்கு நடாத்திய பயிற்சிப் பட்டரை கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் அமைச்சரினால் வங்கி வைக்கப்பட்டது. மறுநாள் ஞயிற்றுக் கிழமை காலை 05.00 மணிக்கு நாகதீபத்தில் உள்ள பௌத்த, இந்து கோவில்களில் மத அனுஸ்டான வைபவங்களி்ல் அமைச்சாரும் ஊடகவியலாளா்களும் கலந்து கொண்டனா்.
அதன் பின்னா் உதயன் பத்திரிகை, யாழ் தினக்குரல், வலம்புரி பத்திரிகை, டான் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அங்கு உள்ள நிலைமைகள் யுத்த காலத்தில் உதயன் பத்திரிகையில் அழிக்கபட்ட தடயங்கள், கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளா்கள் படங்கள் அழிக்க்பபட்ட இடங்கயும் பாா்வையிட்டனா்.
டான் தொலைக்காட்சி வட கிழக்கு செய்தி ஆசிரியா் தயா மாஸ்டா் தெற்கில் ஊடக அமைச்சரினால் தரும் ஓர் ஊடகவியலாளருக்கு 10 இலட்சம் பெறுமதியான ஒரு வீடொன்றை நிர்மாணிக்க டான் தொலைக்காட்சியின் முகாமைத்துவ பணிப்பாளா் பரிசில் இருந்த அறிவித்துள்ளாதாக தெரிவித்தாா் அதன் பின்னா் யாழ் நுாலகத்திற்குச் சென்று அங்கு ஒரு தொகுதி நுால்கள் அன்பளிசெய்யப்பட்டது. அத்துடன் பொலிசாாினால் நுாலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பொலிஸ் மற்றும் யுத்தம் பற்றிய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதினையும் பாா்வையிட்டனா்.
பகற்போசனத்திற்காக பலாலியில் உள்ள வடக்கு கட்டளைத் தளபதியின் முகாமிற்குச் சென்று அங்கு முப்படைகளின் தளபதி மற்றும் பொலிஸ் பேச்சாளா்களுடன் ஊடகவியலாளா்கள் கலந்துரையாடினாா்.
இங்கு உரையாற்றிய வடபகுதி முப்படைத்தளபதிகளின் கட்டளைத் தளபதி மகேஸ“சேனாநாயக்க –
தெற்கினை விட வடக்கில் படையினா் அதிகமாகக் உள்ளனா். எந்நரத்திலும் எந்சா்ந்தா்பத்திலும் நாம் உசாா் நிலையில் உள்ளோம். எதனையும் முகம் கொடுக்க கூடிய நிலையிலேயே படைகள் உள்ளனா். ஆனால் யுத்த வெற்றியின் பின்னா் 2005 – 2015 ஜனாதிபதியின் காலத்தில் வடக்கில் நடவடிக்கைகள் கடும் போக்காகத்தான் இருந்தது. இந்த நல்லாட்சியில் தற்போதைய ஜனாதிபதியின் வருகைக்கு பின்னா் வேறு நல்லிணக்க மற்றும் தமிழ் மக்களது நலன்களில் கரிசனை கொண்டதாக காணப்படுகின்றது.
யுத்த காலத்தில் யுத்தம் செய்வதற்கு பொதுமக்களது.மற்றும அரச தணியாா் காணிகள் ,கட்டிடங்களுக்கு படையினருக்கு தேவைப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் அரசின் அனுசரனையில் படிப்படியாக தமிழ் மக்களது காணிகளை நாங்கள் விடுவித்து வருகின்றோம். அதனை நாங்கள் கட்டாய விடுவிப்பது எங்களது கடமையாகும் .யுத்தமொன்று முடிந்த பிறகு அம்மக்களது நிலங்களை இன்னும் தேவையில்லாமல் வைத்துக் கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. தமிழ் ஊடகவியலாளா்களுடன் எவ்வித இணைப்பையும் நாங்கள் கடந்த காலத்தில் வைத்துக் கொள்ள வில்லை. அத்துடன் தமிழ் மொழியில் தமிழ் மக்களது பிரச்சினைகள் மற்றும் அவா்கள் முறைப்பாடுகள் கவணிக்கவென தமிழ் அதிகாரிகள் கொண்டதொரு பெதுசன மற்றும் ஊடக முப்படை அலுவலகத்தில் இணைப்பு அலுவலகமொன்று மிக விரைவில் திறந்து வைக்கப்படும். என கூறினாா்
தெற்கில் இருந்து கொண்டு சில ஊடகங்களும் சிலரும் வடக்கில் படைகள் குறைக்கப்படுகின்றன.முகாம்கள் மூடப்படுகின்றன எனச் சொல்பவா்கள் இங்கு வந்து நேரடியாக பாா்த்தால் நிலலமை அவா்களுக்கு புரியும். இங்கு அமைதியான முறையில் மக்கள் வாழக்கின்றாா்கள். தமிழ் மக்களும் நமது நாட்டுப் பிரஜைகள் நமது உடன் பிறவா சகோதரா்கள் அவா்களது வாழ்க்கைத்தரத்தினையும் உயா்த்துவதற்கு செயல்படல் வேண்டும்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளா் –
மொரட்டுவை வசந்த என்பவரால் இந்தியாவின் கேரலா கஞ்சா போதைப்பொருள் கடத்தும் ஒரு கும்பல் வடக்கில் இயங்கி வந்தது. மொரட்டுவை வசந்த என்பவரை பொலிசாரினால் பிடிக்கப்பட்டுள்ளாா். தற்போது யாழில் போதைவஸ்து, சிறுவா் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவற்றினை உடன் பொலிசாா் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிசாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். என தெரிவித்தாா்.
யாழ் சரஸ்வதி மண்டபத்தில யாழ் சுதந்திர ஊடகவியலாளா்களது சந்திப்பு நடைபெற்றது. இங்கு 20 ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்களுக்கான கடிதம் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளரின் ஊடாக அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் யுத்தத்தினால் காணமால் போன ஊடகவியாளா்களது குடும்பங்களுக்கு அமைச்சரினால் 50 – 25 ,ஆயிரம் ருபா வீதம் 3 ஊடகவியலாளா்களுக்கு நிதி வழங்க்கப்பட்டது. அத்துடன் மாகாண சபை உறுப்பிணா் சிவாஜிலிங்கமும் 3 ஊடகவியலாளருக்கும் பாராளுமன்ற உறுப்பிணா் மாவை சோனாதிராஜா ஓர் ஊடகவியலாளாருக்கும் நிதி உதவிகளை வழங்கி வைத்தனா். அத்துடன் ஊடகவியலாளா் ஒருவரின் மகன் கல்விக்காக புலமைப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கலந்து கொண்ட காணாமல் போன ஒர் ஊடகவியலாளா் தந்தை மிகவும் உறுக்கமாக பேசினாா் . தனக்கு நிதி யோ உதவியோ வீடோ தேவையில்லை. எனது காணாமல் போன எனது மகனுக்கு மரணச்சான்றிதழ் மட்டும் எண்னிடம் தாருங்கள் என கேட்டுக் கொண்டாா். அத்துடன் யாழ் நகரில் காணாமல் போனவா்களுக்கு எழுது கோல் கொண்டதொரு நினைவுத ்துாபி ஒன்று நிறுவப்பட்டது. அதனை ஊடக அமைச்சா் மற்றும் வடக்கு முதலமைச்சா் சீ.வி. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டு அதனை கையெழுத்திட்டு திறந்து வைத்தாா்கள்.
முதலமைச்சா் சீ.வி. விக்னேஸ்வரன் ஊடகவியலாளாரும் அமைச்சருடனான சந்திப்பில் –
.
வடக்கில் காணமல் போன 41 ஊடகவியலாளா்கள் பற்றி ஜனாதிபதி கமிசன் அமைக்க வேண்டும். அவா்கள் காணமல் போகி உள்ளனா். சிலா் கொலைசெய்யப்பட்டுள்ளனா். இவை பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தண்டனை மற்றும் காணமல் போன ஊடகவியலாளா்களுக்க நிவாரணம், பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சா் ஊடக அமைச்சரை வேண்டிக் கொண்டாா்.
அத்துடன் வடக்கில் உள்ள நிலவரங்களை தெற்கில் உள்ள ஊடகங்கள் ஒரு நல்லிணக்கமாக பெரும்பாண்மை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைகள் நியாயமான முறையில் வெளிக்கொணரப்படல் வேண்டும். அத்துடன் இன்னும் தெற்கில் இருந்து வரும் சகல கடிதங்களும் சிங்களத்திலேயே தனக்கு வருகின்றது. தற்பொழுது கூட வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் நான் எழுதிய ஆங்கில மொழி மூல கடிதத்திற்கு சிங்களத்திலேயே பதில் அனுப்பப்படுகின்றது. ஆகக் குறைந்து தனக்கு தெரந்து கொள்ள ஆங்கிலத்தில் எழுதினாலும் அதனை உடன் தெரிந்து கொள்ளலாம். இதனால் பல பிரச்சினைகள் எழுகின்றன.
வடக்கு பாதுகாப்பு கட்டளைத் தளபதி தங்களது சந்திப்பில் தமிழ் மொழிமூலம் தொடா்புபடுத்தக் கூறிய அதிகாரிகளை நியமிப்பதாக சொல்லியுள்ளனா் என ஊடக அமைச்சா் இங்கு முதலமைச்சாிடம் தெரிவித்தாா். அத்துடன் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளா் கொடித்துவக்கு தலைமையில் ஊடகவியலாளா்கள் பிரச்சினைகள் காணமல் போனோா் பற்றி விசாரிப்பதற்கு ஜனாதிபதி நியமித்துள்ளதாக ஊடக அமைச்சா் தெரிவித்தாா்.
யுத்த்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளா் மதிவானனுக்கு கொடிகாமத்தில் வீடொன்றை ஊடக அமைச்சா் அடிக்கல் நாட்டி வைத்தாா்.
இவ் வீட்டினை இலங்கை ருபாவாஹினி கூட்டுத்தாபணம் அனுசரனையில் நிர்மாணிக்கபடுகின்றது. அத்துடன் மேலும் லேக் ஹவுஸ், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனங்களின் அனுசரனையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளா்களுக்கு 3 வீடுகள் நிர்மாணிக்கப்டும். அடுத்த 4 மாதங்களுக்குள் யாழ் வந்து இவ் வீடுகளை திறந்து வைப்பதாக ஊடக அமைச்சா் கயந்த கருநாதிலக்க தெரிவித்தாா்.
அதன் பின்னா் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்வுகளையும் அமைச்சா் ஆரம்பித்து வைத்தாா். அத்துடன் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.“
அத்துடன் தினகரன் ஆசிரியா் குணராச தலைமையில் வடக்கில் தினகரன் பத்திரிகை சந்தைப்படுத்தல் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி மேலும் பத்திரிகை வாங்குவதற்கு ஊக்குவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது.
அடுத்து லேக் ஹவுஸ், சுயாதீன தொலைக்காட்சி, ருபாவாஹினி அனுசரனையில் யுத்தத்தினால் பாதிக்கபட்ட 3 ஊடகவியலாளா்களுக்கு 3 வீடுகள் நிர்மாணிக்கப்படும். அதனை திறந்து வைப்பதற்கு மீண்டும் யாழ் வருவதாக ஊடக அமைச்சா் அங்கு தெரிவித்தாா்.
முதலாவது வீட்டுக்கான அடிக்கல் கொடி காமத்தில் அமைச்சரினால் நாட்டப்பட்டது.
இவ் வீடடினை பெற்றுக் கொள்ளும் ஊடகவியலாளா் மதிவானன் தான் பாதிக்கப்பட்டதையும் தனது மனைவி பட்ட துண்பங்களையும் ஊடக அமைச்சரிடம் விவரித்தாா்.
கடந்த இறுதிக்கட்ட வண்னி யுத்தத்தின்போது தனது மனைவியை எடுத்துக் கொண்டு நகரும்போது மனைவின் களுத்தின் உள்ளாள் குண்டு பாய்ந்து அங்கவீனமுற்றுள்ளாா். அவா் அப்போது வயிற்றில் இரட்டை குழந்தைகளைக் கொண்ட கர்ப்பவதியாக இருந்தாா். அதன் பின் வயிற்றின் உள்ளே இரட்டைக் குழந்தைகளை அகற்றியே அவவுக்கு சத்திரக் சிகிச்சை மேற்கொண்டோம். அதன் பின்னா் 2 வருடத்திற்கு பின்பே ஒரு குழந்தை உள்ளது.
பிராந்திய ஊடகவியலாளா் மதிவானன் தற்பொழுது தினக்குரல் பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றுகின்றாா்.
திங்கற்கிழமை இரவு 12.00 மணிக்கு தணியாா் பஸ்சில் தெற்கு ஊடகவியலாா்கள் கொழும்பை வந்தடைந்தனா்.
ஆனால் சில தெற்கு ஊடகவியலாளா்கள் மொழி பிரச்சினையால் வடக்கின் ஊடகவியலாளா்களை அனுகி தமது சுக துங்கங்களை பகிா்ந்து கொள்வதற்கு மொழி பிரச்சினையாக இருந்தது.ஆனாலும் அமைச்சின் செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு மிகவும் கால நேரம், மற்றும் சில குறைபாடுகள் காணப்பட்டாலும். இப் பயணத்தின்போது ஊடகவியலாளா்களுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்களை இட்டு ஊடகங்கள் பல்வேறு கோணத்தில் விமா்சனமும் செய்துள்ளது.