கொழும்பு துறைமுக நகரத் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த அமைச்சின் செயலாளருக்கே இவ்வாறு அறிவுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத் திட்டம் காரணமாக பெருந்தொகை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையால் நேற்று மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
இதன்போது கருத்து வௌியிட்ட மஹிந்த அமரவீர, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத் திட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் தற்போது அரசாங்கத்தால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதன்பொருட்டு 500 மில்லின் ரூபாய்களை ஒதுக்க மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறித்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.