தலவத்துகொடையில் மொனாக் ஹொட்டலில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியினருக்கு தெளிவுப்படுத்தும் கருத்தரங்கிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
சர்வதேச நிலைமைகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சர்வதேச நடைமுறைகள் இதில் கடும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியும் புத்திஜீவிகளின் குரல் என்ற அமைப்பும் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியதுடன் அதில் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கலாநிதி தயான் ஜயதிலக்க, பேராசிரியர் டப்ளியூ.டி.லக்ஷ்மன், கலாநிதி. சுமணசிறி லியனகே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார உட்பட புத்திஜீவிகள் இந்த கருத்தரங்கில் உரையாற்றினர்.
இந்த கருத்தரங்கை அடுத்து, மே தினத்தை கொண்டாடும் விதமாக இந்தியாவுடன் அரசாங்கம் செய்து கொள்ள உள்ள எட்கா உடன்படிக்கை உட்பட சில விடயங்கள் குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர்.
எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.