ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக அவர் இந்த விசேட உரையை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நாள் முதல் தற்போது வரையிலான காலப்பகுதி, அரசியல் சூழ்நிலைகள், தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள்,
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி தமது உரையில் தெளிவுபடுத்த உள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.