ஐக்கிய தேசிய கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளை தலைவர் ரணில் ஆரம்பித்துள்ளார்!

Premier-Ranil_Fotor
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் மற்றும் ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கு பொருத்தமான வகையில் முழு சீர்திருத்தம் செய்வதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கமைய கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட தலைவர்களுக்கு அதிகமான சந்தர்ப்பம் வழங்குவதனை அடிப்படையாக கொண்டு இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை தலைவர் ஆரம்பித்துள்ளார்.

கட்சியின் ஏற்பாடு நடவடிக்கைளை வலுவடைய செய்வதன் மூலம், எதிர்வரும் காலங்களில் மக்களின் செல்வாக்கினை பெற்றுக் கொள்வது இதன் பிரதான காரணமாகும்.

இந்த செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, கட்சியின் முதற்கட்ட தலைவர்களுக்கு அரசாங்க அமைச்சு பதவி வழங்கிவிட்டு அவர்களிடம் காணப்படுகின்ற முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கமைய கட்சியை எதிர்கால தலைமைத்துவம் வழங்கப்படவுள்ளன.

கட்சியின் மூன்றாம் மட்ட தலைமைத்துவம் தற்போது வரையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அண்மையில் இடம்பெற்ற “புதிய இலங்கைக்கு இடமளிக்கவும்” என்ற தலைப்பில் மக்கள் வியாபாரத்தை ஏற்பாடு செய்வதற்கான பிரதான பொறுப்புகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியின் முதலாம் மட்ட தலைவர்கள் ஏற்பாடு செய்த ஹைட் மைதான கூட்டத்தை விடவும் மிகவும் சிறப்பாக இந்த கூட்டத்தை மூன்றாம் மட்டத்தினருக்கு முடிந்துள்ளமை குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வழங்குவதற்காகவும் மேலும் விரிவாக்கம் செய்வதனை நோக்கமாக கொண்டு கட்சியில் திருத்தத்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.