முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம், இந்த யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படுவதை தடுக்க முடியும் என்பதுடன் தற்போதைய நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த யோசனைக்கு விருப்பம் தெரிவிப்பார் என நம்பப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.