இன்று நடைபெறும் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் குறித்து ஸ்டீவன் சுமித், சோயிப் மாலிக் கருத்து!

3faf1872-4f41-4776-8534-96fb145a0b97_S_secvpf6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. குரூப்2 சுற்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் மொகாலியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது. 

‘‘கடந்த இரு ஆட்டங்களை விட நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆட வேண்டும். எங்களது 100 சதவீத திறமை இன்னும் வெளியாகவில்லை. அதில் கவனம் செலுத்துகிறோம்’’

–ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்

‘‘எங்கள் அணிக்குள் பிளவு இருப்பதாக வெளியான தகவல்கள் என்னை பொறுத்தவரை அடிப்படை ஆதாரமற்றவை. இதனால் தான் நாங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2009–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையின் போது எங்கள் அணியில் இடம் பிடித்த 6 வீரர்கள் ஒருவர்கொருவர் பேசிக்கொள்ளமாட்டார்கள். அதனை சமாளித்து அந்த உலக கோப்பையை வென்று சாதித்தோம் என்பதை நினைவு கூர விரும்புகிறேன்’’

–பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்