கொஞ்சம் சிரிங்க எனும் நகைச்சுவைச் சங்கமம் !

ஏ.எஸ்.எம். ஜாவித்

 
  நம்நாடு நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் பௌர்னமி தினத்தில் நடைபெறும் கொஞ்சம் சிரிங்க எனும் நகைச்சுவைச் சங்கமம் நிகழ்வு பேரவையின் தலைவர் சமுகஜோதி ரபீகின் வழி நடத்தலில் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் கொழும்பு-12, மெசன்ஜர் வீதியில் உள்ள பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்றது.

Collage_Fotor_Fotor

 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரபல கலைஞரும் நடிகருமான வில்சன் குணவர்த்தன கலந்து கொண்ட நிகழ்வில் பல கலைஞர்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் குழுக்கள் மூலம் மூவருக்கு பரிசில்களும் பிரதம அதிதியால் வழங்கப்பட்டதுடன் பிரதம அதிதிக்கு நம்நாடு நற்பணிப் பேரவையின் தலைவர் சமுகஜோதி ரபீகினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.