ஆரிஹாமத்தில் பேனா முனையின் நேசம்  நூல் வெளியீட்டு விழா

 

சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்

 

தும்மளசூரிய ஆரிஹாமம் அஹதியாநகர் எஸ்.எப்.ரினோஸா முக்தார் எழுதிய “பேனா முனையின் நேசம்” சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா குளி/யகம்வெல முஸ்லிம் வித்தியாலயத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

குளி/யகம்வெல முஸ்லிம் வித்தியாலய அதிபர் மௌலவி ஏ.எல்.அஷ்ரப்கான்(மனாரி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதான ஆசியருமான என்.எம்.அமீன் முன்னிலை வகிக்கிறார். நூலின் முதற் பிரதியை ஷாபிர் மன்சூர் பவுண்டேஷன் பணிப்பாளர் எம்.எம்.எம்.ஷாபிர் பெற்றுக் கொள்கிறார்.

cover_Fotor

 

இவ்விழாவில் விசேட அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், நவமணி உதவி ஆசிரியர் கலைவாதி கலீல், குளியாப்பிட்டிய கல்வி வலயம் தமிழ் மொழிப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜீ.அஷ்ரப், கிண்ணியா அமீரலி உட்பட பல விசேட அதிதிகள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஊர்ப் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ரினோஸா முக்தார் பத்திரிகைகளிலும் வானொலியிலும் எழுதிய சிறுகதைகளை உள்ளடக்கி இந்த நூல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.