பாகிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் சரண் அடைந்தது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை. உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வென்றதில்லை என்ற சோகம் இன்னும் தொடருகிறது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி மீதான விமர்சனம் அதிகரித்து இருக்கிறது.
முதல் இரண்டு ஆட்டங்களில் அபார வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். முந்தைய தோல்வியை மறந்து வெற்றி பாதைக்கு திரும்புவதுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது முக்கியம் என்பதால் பாகிஸ்தான் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.