தற்போதைய அரசாங்கம் பாரிய நிதிநெருக்கடியில் உள்ளதாகவும், அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை கூட வழங்கமுடியாத நிலையில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
திறைசேரியில் நிதியில்லாமை காரணமாக அரசாங்கம் திண்டாடுகிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை காரணமாகவே மேற்படி நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு எதிரானவர்கள் சதிப்புரட்சிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.