கடந்த ஓர் இரு தினங்களில் அம்பாரை மாவட்டத்தில் உற்றுநோக்கப்பட்ட ஒரு நபராகவும் அக்கரைப்பற்றில் அரச காரியாலயம் தொடக்கம் பெட்டிக்கடை வரை, உயர் அதிகாரிகள் தொடக்கம் சிறுபிள்ளைகள் வரை பேசப்படக் கூடியவராகவும்,நேசிக்கப்படக் கூடியவராகவும் சபீஸ் மாறியுள்ளார். அதற்கு காரணம் அக்கரைப்பற்று நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் ஒருபகுதி பிரிபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடாத்தப்பட்ட மிகப் பெரிய ஆர்பாட்ட கண்டன பேரணியாகும்.
மு கா ன் தேசிய மாநாடு ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வார்பாட்ட பேரணி இடம்பெறவிருந்ததால் தேசிய மாநாட்டுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வருகையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பீதி மு கா கட்சியின் உயர்பீட மட்டங்களில் காணக்கூடியதாக் இருந்தது காரணம் ஜனாதிபதியும் பிரதமரும் மாநாட்டுத் தினத்தன்று அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் உள்ள புதிய கட்டடங்களை திறந்து வைப்பதே முதல் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனவே ஆர்பாட்ட பேரணியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். அக்கரைப்பற்றில் உள்ள தமது முகவரின் காடையர்களைக் கொண்டு பள்ளிவாசல் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டனர், பெரும்பாலான பள்ளித்தலைவர்கள் ஆசிரியர்களாகவும்,அதிபர்களாகவு ம்,அரசாங்க தொழில் செய்பவர்களாகவும் இருந்ததனால் தண்ணி இல்லாக்காட்டுக்கு இடம்மாற்றம் செய்வோம் என எச்சரிக்கப்பட்டனர் .
அரச பதவிகளில் இல்லாத பளித்தலைவர்களை அவர்களது அரச தொழில் செய்கின்ற பிள்ளைகளின் மூலம் அச்சுறுத்தினர் , இவ்விரண்டும் இல்லாத பள்ளித் தலைவர்களின் வீட்டுக்கு காடையர் கும்பல்களை அனுப்பி கொலை மிரட்டல் செய்தனர்
சிறுதுளி அளவேனும் அரசியல் அதிகாரம் இல்லை, உறுதுணையாக வந்தவர்கள் ஓடி ஒழித்துவிட்டனர், எதிரிகள் பொய்யான வதந்திகளை பரப்பியவன்னமே இருந்தனர், ஒருகட்டத்தில் எஸ் எம் சபீஸ் தனித்து விடப்பட்டார் இருந்தாலும் அக்கரைப்பற்று இளைஜர்கள்மீதும் அங்குள்ள மக்கள்மீதும் அதீத நம்பிக்கை வைத்தவராகவும் சவால்களை எதிர் கொண்டு சோதனைகளை வெற்றியாக மாற்றக்கூடிய தைரியம் மிக்கவராகவும் சபீஸ் காணப்பட்டார்,
இவரது நம்பிக்கையை சிக்குநூறாக்க போலீசில் பொய்யான முறைப்பாடுகள் செய்யப்பட்டு பலமணிநேர விசாரணை இடம்பெற்றது 113 வது சட்டப்பிரிவின்கீழ் கைது செய்வோம் என அச்சுறுத்தப்பட்டார், எதற்கும் அசையாத எஸ் எம் சபீஸ் மக்களுக்காக, அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக சிறை செல்லவும் தயாராகவே உள்ளேன் அதற்க்கு நான் பயப்படவில்லை என்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமில்லாமல் காவல் அதிகாரிகள் மக்களுக்காகவா? இல்லை காடையர் கும்பலுக்காகவா? இயங்குகிறது என துணிச்சலாக கேள்வி கேட்டு போலீஸ் பொறுப்பதிகாரியை சிந்திக்க வைத்துள்ளார் .
இத்துணிவும், மண்மீது கொண்ட பற்றும் மக்கள்மீது கொண்ட நேசமுமே ஜனாதிபதி மற்றும் பிரதமரை சிந்தித்து தமது நிகழ்சி நிரலை மாற்றும் அளவிற்கு கொண்டுபோய் சேர்த்தது .(இன்னும் சிலதினங்களில் பிராந்திய காரியாலய பிரிப்புக்கு விடைகிடைத்துவிடும் என எதிர்பார்க்கலாம்)
இன்று அக்கரைப்பற்று மக்கள் தாம்கண்ட ஒருதலைவனுக்குகீழ் வீரமிகு துணிச்சலான ஒருதலைமைத்துவம் வளர்ந்துள்ளதனைக் கண்டு ஆனந்தம் அடைந்துள்ளனர், எதிர்காலத்தில் அக்கரைப்பற்று மக்கள் அம்மண்ணுக்காக போராடிய எஸ் எம் சபீசை தூக்கிப் பிடிப்பர் என்பதில் சந்தேகம் கிடையாது.
இவ்விடத்தில் ஒன்றை ஜாபாகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றோம் கடந்த வருட இறுதியில் அளுத்கமை பேருவளையில் இடம்பெற்ற வன்செயல்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தப்படாமல் 18 மாதங்களுக்கு மேல் எந்தவித அறிக்கையும் மனித உரிமை ஆணையகத்தினால் சமர்பிக்க படாமல் இருக்கும் போது, பொது பல சேன அமைப்பினால் வழங்கப்பட்ட வன்சொல் சட்டத்துக்கு எதிரான மனுவிற்கு 24 மணித்தியாலயங்களுக்குள் அரசுக்கு ஆலோசனை வழங்கியமை தொடர்பில் மனித உரிமை ஆணையகம் முறைகேடாக நடந்துள்ளது அது பொது பலசேனா வுக்கு அடிபணித்து போகிறது என சர்வதே மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மனு சமர்பித்தமை இவரின் துணிச்சலை பறைசாற்றுகிறது