இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு(எட்கா) உடன்படிக்கையின் வரைபை இந்தியா இன்னமும் ஆராய்ந்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்தியா முன்மொழிகளை வழங்கியிருந்தது.
இதனையடுத்து இலங்கை தமது வரைபை வழங்கியிருக்கிறது. இந்தநிலையில் இரண்டு நாடுகளின் பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலேயே இந்த உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படும் என்றும் சிங்ஹா குறிப்பிட்டுள்ளார்