ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு பாலமுனையில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே , எதிர்க் கட்ச்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
முஸ்லிம் காங்கிரஸின் கட்சியிலிருந்து நேற்று இருவரை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று நள்ளிரவுக்குள் இன்னும் சிலரை கட்சியிலிருந்து இடைநிறுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் உரை நிகழ்த்துகையில் ,
சில குருநில மன்னர்களுடன் இணைந்து நாடகமாடி விட்டு வந்து இன்று மேடையில் அமர முடியும். இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் .ஹக்கீமின் இந்த உரையின் போது, ஹசன் அலி மற்றும் பஸீர் சேகுதாவூத் ஆகியோரின் பெயர்களை அவர் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், மறைமுகமாக அவர்களை தாக்கிப் பேசியதை உணரமுடிந்தது.
கட்சியின் தவிசாளர் இம் மாநாட்டில் கலந்து கொண்ட போதும் செயலாளர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது