கூட்டு எதிர்க்கட்சிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
அடுத்த பேரணி மற்றும் கூட்டத்தை எங்கு எப்போது நடாத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த பேரணியையும் கூட்டத்தையும் நடாத்துவதா அல்லது அதன் பின்னர் நடத்துவதா என்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்படவுள்ளது.
புத்தாண்டின் பின்னர் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டால், அது மே தினத்தில் நடாத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.