இதனால் பாடசாலை ஆசிரியர்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆண்டு தொடக்கத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டு அதை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்திருந்தனர்.
திறமையான வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் பிரித்தானியாவில் குடியிருக்க வேண்டும் எனில்,
*வேலை தரும் நிறுவனம் ஒன்று அவருக்கு 20,800 பவுண்டு ஊதியமாக வழங்க வேண்டும்.
*வங்கிக்கணக்கில் குறைந்தது 90 நாட்களுக்காவது 945 பவுண்டு சேமிப்பு இருக்க வேண்டும்.
*வேலை வழங்குபவர்களிடம் இருந்து Sponsorship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*சுகாதார கட்டணமாக 200 பவுண்டு அளிக்க வேண்டும்.
*ஆங்கில மொழியில் திறமையை நிரூபிக்க வேண்டும்.
Tier – 2 இந்த விசா கைவசம் வைத்திருப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் முடிவில் புதிதாக மனு அளிக்க வேண்டும், இப்படி மனு அளிப்பவர்கள் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து 35,000 பவுண்டுகள் வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
தற்போது மருத்துவ தாதியர்களை மட்டும் தாற்காலிகமாக இந்த சட்டத்தில் இருந்து விடுவித்துள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் தாதியர்களுக்கும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு இந்த புது சட்டத்தில் இருந்து விடுப்பு வழங்கப்படவில்லை. மேலும் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக குடியேறிவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவும் அவர்கள் வெளியேற்றப்பட மாட்டாது எனவும் கூறுகின்றனர்.
மேலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இந்த புது சட்டம் பொருந்தாது, மட்டுமின்றி அவர்களுக்கு ஊதிய வரைமுறை கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் மாணவருக்கான விசாவில் இருப்பவர்கள் நேரிடையாக தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் புது வருவாய் வரைமுறை தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது.
பிரித்தானிய குடிமக்களை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்த புது சட்டம் பொருந்தாது.
இச் சட்டம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும், இது தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதாயின் 0300 123 2241 என்னும் இலக்கத்தில் தொடர்பினை ஏற்படுத்தலாம் என பிரித்தனைய குடியகல்வு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.