ஒபாமாவின் வருகைக்கு முன்பாக கியூபா மீதான தடைகளை தளர்த்துகிறது அமெரிக்கா !

barack obama

 

கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கியூபாவிற்கு இன்னும் சில தினங்களில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், கியூபா மீதான பொருளாதார மற்றும் போக்குவரத்து துறைகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா தளர்த்த உள்ளது. 

அமெரிக்கா, கியூபா ஆகிய 2 நாடுகள் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகைமை நிலவி வந்தது. இப்போது அவ்விரு நாடுகள் பகைமைக்கு விடை கொடுத்துவிட்டு உறவுக்கு நட்புக்கரம் நீட்டி உள்ளன. தூதரக உறவும் மலர்ந்துள்ளது. 

இந்த உறவினை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபாவுக்கு செல்ல உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது. இந்த சுற்றுப் பயணத் தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒபாமா உறுதி செய்தார். 

கடந்த 90 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபா செல்வது இதுவே முதல் முறையாகும். இம்மாதம் 21,22 தேதிகளில் அவர் கியூபா செல்கிறார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், ஒபாமா பயணத்தையொட்டி கியூபா மீதான தடைகளை தளர்த்த அமெரிக்க முடிவு செய்துள்ளது.