20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் சூடுபிடிக்கும்!

ICC-T20-World-Cup-2016-schedule

கடந்த 8–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் தகுதி சுற்று 13–ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றன.

முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்று நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘குரூப் 1’ பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளும், ‘குரூப் 2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.