நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய ரஞ்சித் சியாம்பலாபிடிய உள்ளிட்ட குழுவினர் விஜயம்!

Unknownநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய, அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய உள்ளிட்ட குழுவினர் இன்று அங்கு விஜயம் செய்துள்ளனர்.

இவர்களில் இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேயபால உள்ளிட்ட அதிகாரிகளும், ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

பியகம பகுதியிலுள்ள பிரதான ட்ரான்ஸ்போமரில் ஏற்பட்ட சேதம் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதோடு, தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில், மின் நிலையைத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் செல்லலாம் என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.