துணை நிற்பவர்கள் அக்கரைப்பற்றின் துரோகிகளாக வரலாறு நெடுகிலும் வஞ்சிக்கப்படுவார்கள் : அஸ்மி !

 azmy 

அஸ்மி அப்துல் கபூர் (தேசிய காங்கிரஸ் – முந்நாள் மாநகர சபை உறுப்பினர் ) ஊடக அறிக்கை ,

அக்கரைப்பற்றுக்கான அரசியல் பழிவாங்கல் நெடுகால வரலாற்றை கொண்டது.அதற்கான இறைவனின் அநுகூலமே  அதாஉல்லாஹ் அமைச்சரின் அபிவிருத்தியும் வேலைத்திட்டங்களாகும். ஆரம்பத்தில் அக்கரைப்பற்று என்கின்ற பிரதேசத்தில் பாரளுமன்ற உறுப்புரிமை வரக்கூடாது என்கின்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகளாக பிரித்து நடந்த சதியில் அக்கரைப்பற்று மக்களை இறைவன் கைவிடவில்லை.

 

அவ்வாறான சதிகளையல்லாம் சதி காரர்களுக்கல்லாம் மிகைத்த சதிகாரனாகி இறைவன் முறியடித்தான்.அதே போன்றொரு நிலை இன்று தங்களின் அற்ப அதிகாரங்களுக்காக அக்கரைப்பற்று மக்களை இருண்ட யுகத்துக்கு அழைத்து செல்ல சிலர் ஈடுபாடு கொண்டிருக்கின்றர். அதன் ஒரு அங்கமாகவும் கரையோர கச்சேரி என்கின்ற விடயதனத்தில் அக்கரைப்பற்றினுடைய பிராந்திய காரியாலயங்ளை வேறு பிரதேசத்துக்கு நகர்வு செய்து அவர்களது சதிகளை நிறைவு செய்வதற்கான முதற் கட்ட நடவடிக்கையே நீர்வழங்கள் வடிகாலமைப்பு பிராந்திய காரியாலயத்தின் தரக்குறைப்பு பிரித்தெடுத்தல் நடவடிக்கையாகும்
நல்லாட்சியின் நடு நிசியில் இணைந்து சமுகத்தின் குரலாக பேச வேண்டியவர்களின் நயவஞ்சக தனமே பிரதேசங்களின் பிரித்தாளுகையூடான அரசியல்  குறுகிய சுயநல சிந்தனையாகும்.
இதற்காக துணை நிற்பவர்கள் அக்கரைப்பற்றின் துரோகிகளாக வரலாறு நெடுகிலும் வஞ்சிக்கப்படுவார்கள். இருக்கின்ற தங்களது வளங்களை தயாகமே கேயிடம்  அடகு வைத்து துரோகிகளால் அரசியல் அதிகாரத்தை இழந்த அக்கரைப்பற்றினுடைய வளங்களை சூறையாடி அம் மக்களை திருப்தியடைய செய்யும் வங்குரோத்து தனத்தை வரலாற்றில் எந்த அரசியல்வாதிகளும்மேற்கொண்டதில்லை.
இதற்கான முழுப்பொறுப்பையும் நல்லாட்சியை வேண்டி நின்ற எம் மக்கள் ஜனாதிபதியிடம் முறையிட வேண்டும்