‘மு.கா கிரிக்கெட் சமர்’

IMG_2231_Fotor

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர் அணியினரையும், மு.கா மக்கள்பிரதிநிதிகளையும் இணைத்து சிநேகபூர்வ ‘கிரிக்கெட் சமர்’; பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) சனிக்கிழமைவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்,  கட்சியின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இப்போட்டியில் கட்சிக்காக உயிர் தீர்த்த போராளிகளின் பெயர்களைத் தாங்கிய பிரதி அமைச்சர் ஹரீஸ், பிரதி அமைச்சர் பைசால்காசீம், சிரேஷ்ட  பிரதித் தலைவர் முழக்கம் ஏ.எல்.ஏ.மஜீத், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்ஏ.எல்.தவம், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்,  உயர்பீட உறுப்பினர்எம்.ஏ.வாஹிட் தலைமையிலான கிரிக்கெட் அணிகள் இக்கிரிக்கெட் சமரில் களமிறங்கியது.

5 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட இக்கிரிக்கெட் சமரில் பிரதி அமைச்சர் பைசால் காசீம் தலைமையிலானஅணி சம்பியனானது.

இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிக்காக கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

இப்போட்டி நிகழ்ச்சி கட்சி எதிர்கால ஆரோக்கியதிற்கு கால்கோலாக அமைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் கட்சியின் பற்றும்ஏற்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூக் ஹக்கீம் இதன்போது கருத்து தெரிவித்தார். 

இக்கிரிக்கெட் சமர் மூலம் மு.கா மக்கள் பிரதிநிதிகளுக்கும் இளைஞர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினையும், கட்சியில் யாவரும்சமமானவர்கள், இளைஞர்களும் கட்சியின் பங்காளிகள் என்ற உணர்வினை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமை நிகழ்வின்வெற்றியாகும் என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.