அஷ்சூர் சேகு இஸ்ஸதீன் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வர் ,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநாடு தொடர்பாக ,
வாளாவிருப்பவர்கள் எல்லாம், வரலாறு தெரியாதவர்கள் அல்ல. உங்கள் அரசியல் சாணக்கியத்தின் அசிங்கத்தை அருவருப்போடு பார்த்து மௌனமாக இருப்பவர்கள்.
மூத்த போராளிகளுக்கு கௌரவம் என்றால், 1987 ல் முதலாவது மாநாட்டை 7வது மாநாடு என்று கொண்டாடியதற்கு, போஸ்டர் ஒட்டிய நாங்களும் மூத்த போராளிகள்தான்.
இப்போது இருப்பவர்களில் எத்தனை பேர் அன்று அதை எதிர்த்தார்கள், தடைகள் போட்டார்கள், கட்சி அடிப்படை அங்கத்துவமும் இல்லாமல் இருந்தார்கள் என்பது தெரிந்தவர்களும் இல்லை, தெரிந்து கொள்ளும் அவசியமும் இன்றுள்ளவர்களிடம் இல்லை.
இந்த கட்சி ஏன் உருவாக்கப்பட்டது? அது உருவாக்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறி விட்டனவா? அந்த நோக்கங்களை நிறைவேற்றும் பாதையில்தான் கட்சி பயணிக்கின்றதா? என்பது பற்றி எல்லாம் யாருக்கும் அக்கறையில்லை.
சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும், இறை அச்சமும் இல்லாத தலைமை வழி நடத்தும் அமைப்பில் எந்த பதவிகளும் எம்மை அலங்கரித்து விடாது என்று தள்ளி இருப்பவர்கள் நாங்கள்.
பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விடயத்தை விசாரித்த ஜம்மியதுல் உலமா கண்டு கொண்ட உண்மைகள் என்ன? அந்த உண்மைகள் வெளியிடப்படாத நோக்கம் என்ன? என்பது பற்றி அக்கறையில்லாமல், கண் மூடித்தனமாக ஒரு கட்சியையும் அதன் தலைமையையும் ஆதரிக்கும் குருட்டுத்தனமான மூடர்களினால் சலிப்புற்று, அரசியலே வேண்டாம் என்றுதான் வாளாவிருக்கிறோம்.
சுய லாபங்களுக்காக, அம்மக்கள் பகடைக் காய்களாக்கப்படும் போதும், காட்டிக் கொடுக்கப்படும் போதும், அடிமைச்சாசனங்களை அம்மக்களின் முதுகினில் அறையப்படும் போது சொந்த லாபங்கலுக்காக வாளாவிருக்கும் போதும் நெஞ்சு பொறுப்பதில்லை.
எந்த மக்கள் நிம்மதியாய் இருக்க வேண்டும் என்பதற்காக, தோள்களில் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு, உறக்கம் தொலைத்து, இரவுகளில் வீதி வீதியாய் காவல் காத்தோமோ, சிறை சென்றோமோ, அதே மக்களால் நிராகரிக்கப் பட்டு, போலிகள் பதவிகளில் அமர்த்தப்படுவதை எண்ணி நொந்து,
இந்த சமுதாயம் தன்னை திருத்திக் கொள்ளும் போது இறைவன் இவர்களை திருத்தட்டும் என்று எண்ணி வாளாவிருக்கிறோம்.
நீங்கள் செய்வதை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல், உங்களைப் படைத்த இறைவனும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை? ஸினா செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள் என்று ஜம்மியதுல் உலமாவிடம் கூலாக சொன்னவர்கள் தானே நீங்கள்.
இல்லை என்று என்னிடம் வாதாட வருபவர்கள், 19ம் திகதி பாலமுனையில் பகிரங்கமாக கேளுங்கள். அந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தீர்களா என்று கேளுங்கள். ஸினா செய்தவரை, பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவரை தலைவராக கொண்டிருப்பதை கேவலமாக பார்க்கிறார்கள் என்று, உண்மையைச் சொல்லும்படி கேளுங்கள். கேட்பீர்களா?
கொடுத்த வாக்கை காக்கவொண்ணாத, மீறும் எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டே போலி வாக்குறுதிகளை வழங்கும் ஒரு நயவஞ்சக தலைவரின் அடிவருடிகள் அல்லவா? கேட்க மாட்டீர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பக்கமும் பேரம் பேசி, மஹிந்த அதிகமாக தருகிறேன் என்றதும், கடைசி வரை மைத்திரி அணிக்கு வர தயங்கியதை மறந்திருப்பீர்கள். கடைசியில் மைத்திரி பக்கம் மாறுவதற்கு பேரம் பேசி பணம் வாங்கிய தலைவரின் அடிவருடிகளல்லவா? இதையும் கேட்க மாட்டீர்கள்.
உண்மையான போராளி நான் என்று மார்தட்டிக் கொள்ள உங்களில் ஒருவரேனும் இருந்தால், 19ம் திகதி இவற்றை பகிரங்கமாகக் கேட்டு , உங்கள் தலைவரின் நற்பெயருக்கு (அப்படி ஒன்று இருந்தால்) ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்குங்கள். குறைந்த பட்சம், ஒரு உத்தமனைத்தான் தலைவராக கொண்டிருக்கின்றோம் எனும் சுய திருப்தியாவது கிடைக்கும்.
இல்லை என்றால் எத்தனையோ தமிழ் சிங்கள கட்சிகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக உங்களையும் எண்ணிக் கொள்கிறோம். மறுபடியும் குர்ஆன் , ஹதீஸ் என்று சொல்லி நொட்ட வரப்பொடா…..