மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனில் 90 வீதமான பணம் பிரயோசனம் இல்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடன் நிதியை பயன்படுத்தி என்ன செய்தது என்பது எனக்கு தெரியும்.
பாணம பிரதேசத்தில் மூன்று இளவரசர்களுக்காக ஆயிரத்து 610 லட்சம் ரூபா செலவில் மூன்று ஆடம்பர பங்களாக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு தலா மூன்று நீச்சல் தடாகங்கள், மதுபானம் அருந்தும் இடம், ஆடம்பரமான தலா இரண்டு அறைகள் அவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
விமானப்படைக்காக பெற்றுக்கொண்ட பணத்தை பயன்படுத்தி இந்த பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறார் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.