2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சொத்து விபரங்களை ஒப்படைக்காமை குறித்து துமிந்த சில்வாவிற்கு எதிராக மூன்று வழக்குகள் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்ற ச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டு வழக்கை துரித கதியில் முடித்துக் கொள்ள விரும்புவதாக துமிந்த சில்வா, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவின் சட்டத்தரணி அனுஜ பிரேமரட்ன, நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இந்த விடயங்களை கூறியிருந்தார்.
இதன்பிரகாரம், வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.