தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்…
சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பௌத்த பிக்குகள் 48 பேரை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துள்ளது.
உயிர் காப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதில் பத்து கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பத்து தடவைகள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்னிலையாகவில்லை.
சிலருக்கு எதிரான முறைப்பாடுகள் வெறும் முறைப்பாடுகளாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் சிலருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுத்து வருகிஜன்றது.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்போருக்கு எதிராகவே சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
மக்கள் மீது அதிக வரிச் சுமையை திணித்துள்ள அரசாங்கம் மக்கள் கிளர்ச்சியை தடுக்க இவ்வாறு செய்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பொல்கம்பொல மேலும் குறிப்பிட்டுள்ளார்.