கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் 100 மெற்றிக் தொன் டைனமைற்றை கொள்வனவு செய்து அது காலாவதியாகும் வரையில் வைத்திருந்து விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் உள்ள களஞ்சியமொன்றில் வைத்திருந்து அரசாங்க நியதிகளுக்கு புறம்பான வகையில் கலாவதியாகும் வரையில் டைனமைற்களை வைத்திருந்து அதன் பின்னர் விற்பனை செய்த காரணத்தினால் 22 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விபரங்களை நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
டைனமைற்கள் காலாவதியாக இருப்பதாக வெலிசர கடற்படை முகாம் அதிகாரிகள் பல தடவைகள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்னவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்.
எனினும் இந்த அறிவிப்புக்களுக்கு எவ்வித உரிய பதிலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டைனமைற்றை கொள்வனவு செய்ய சில தரப்பினர் தயாராக இருந்த போதிலும் அவை காலாவதியாகும் வரையில் வைத்திருந்து அதன் பின்னர் கடந்த அரசாங்கம் விற்பனை செய்துள்ளது.
கடந்த அரசாங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எதேச்சதிகாரமாக செயற்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி ஜனக பண்டார, நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.