மைத்திரிபால காலத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வாய்ப்புள்ளது : சொல்ஹெய்ம் !

EnvironmentMinisterErikSolheim-large_Fotor

 

இலங்கையின் தலைமைப்பொறுப்பில் மைத்திரிபால சிறிசேன இருக்கின்ற இந்த தருணத்தில் இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான சிறந்த வாய்ப்புள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனநாயகத்தின் சக்தி மிகவும் வலிமையானது, இதன் காரணமாகவே அதனால் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்றமுடிந்தது.யுத்தத்திற்கு பின்னர் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து அவர் உறுதியளித்தபோதிலும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இரு முக்கிய தடைகள் காணப்பட்டன.இலங்கையின் இரு பிரதான அரசியற்கட்சிகளாலும் இணைந்து செயற்படமுடியவில்லை,ஓரு கட்சி முன்னோக்கி செல்வதற்கு சிந்தித்தவேளை மற்றைய கட்சி அந்த கட்சி இதனை கருவியாக பயன்படுத்தி அரசியல் வெற்றிகளை பெரும் என அச்சம்கொள்வது வழமையாக காணப்பட்டது.

இரண்டாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வன்முறைகளை நம்பியிருந்தது. அரசியற்பிரச்சினைகளிற்கு இராணுவதீர்வு உள்ளது என அவர் முழுமையாக நம்பினார்,இது அரசியல் முட்டாள்தனமாகும்.உலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்றால் படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும் என நோர்வே சமாதான குழுவினர் காலத்திற்கு காலம் விடுதலைப்புலிகளிற்கு தெரிவித்து வந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.