உங்கள் அணு ஆயுத கொள்கைகளுக்கு ஆதரவளிக்க முடியாது : வடகொரியாவுக்கு சீனா எச்சரிக்கை

59c5ce37-c913-49c2-8bae-08cc7f200260_S_secvpf

தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் எச்சரிக்கையையும் மீறி அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 4–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதேபோல் கடந்த மாதம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணையை செலுத்தி பரிசோதனை செய்தது.

அணுகுண்டு சோதனைகளை நடத்தியதற்காக ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்நாட்டின் மீது மேலும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன் கூறியிருந்தார். இது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்,  வட கொரியாவின் நெருங்கிய நட்பு நாடாக அறியப்படும் சீனா, அந்நாட்டுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி கூறும் போது, “வட கொரியா வளர்ச்சியையும் பாதுகாப்பையும் கோருமானால், நாங்கள்  உதவியும், ஆதரவும் வழங்க தயாராக உள்ளோம். அதேவேளையில், வட கொரியாவின் அணு ஆயுத  திட்டங்களையும், ஏவுகணை திட்டங்களுக்கும்  ஒரு போதும் ஆதரவு அளிக்க போவது இல்லை” என தெரிவித்தார். வடகொரியாவுக்கு எதிராக சீனா இவ்வாறு வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது இதுதான் முதல் முறையாகும்.