இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை விமர்சனத்திற்கு உட்படுத்துவதற்கு பதிலாக தன்னை விமர்சிக்குமாறு அவர் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் இன்று கேட்டுக்கொண்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நேற்றிரவு திடீரென நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தான் மற்றும் சங்கக்கார உள்ளிட்ட தெரிவுக்குழுவின் கால வரையறை ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அரவிந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கு இணங்கவே தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.