நான் ஜனாதிபதியானால் தீவிரவாத குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவேன் !

donald trump

 

அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுபவர்களில் டெனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார். 

அவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான சி.பி.எஸ்.க்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, 

நான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தீவிரவாத குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவேன். 

தற்போது இதில் காணப்படும் சட்டங்கள் மென்மையான போக்கு கொண்டவையாக உள்ளன. இதேபோல விசாரணை முறைகளையும் வலுப்படுத்துவேன். 

தீவிரவாதிகள் எந்த மாதிரியான தண்டனை தருகிறார்களோ, அதேபோல் அவர்களுக்கும் தண்டனை தரவேண்டும். அவர்களை சித்திரவதை செய்து கொல்லவேண்டும். 

அவர்கள் விளையாடுவதுபோல் நாமும் ஆடவேண்டும். அப்போதுதான் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். ஐ.எஸ். தீவிரவாதிகளின் மனைவிகள், குழந்தைகளையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொல்லவேண்டும். 

ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்தும், கூண்டுக்குள் அடைத்து வைத்து நீரில் மூழ்க வைத்தும் கொலை செய்கின்றனர். 

இதே மாதிரியான தண்டனைகளை நாமும் அவர்களுக்கு வழங்கவேண்டும். சட்டங்கள் மென்மையாக இருந்தால் உங்களால் எதையும் சாதிக்க இயலாது. 

நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு உள்ள இதுபோன்ற தண்டனை முறைகளை அமுல்படுத்தும் வகையில் சட்டவிதிகள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.