சம்பிக்கவிடம் விரைவில் விசாரணை !

chambika ranawakke

 

அண்மையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி, எதிர்வரும் 10ம் திகதி குறித்த அறிக்கையை கையளிக்குமாறு, பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அண்மையில் இராஜகிரிய – சரண மாவத்தை பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, இதன்போது காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இது தொடர்பிலான விசாரணைகள் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து விரைவில் சம்பிக்க ரணவக்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.