வங்காளதேசத்தில் இஸ்லாம் அரசு மதத்தில் இருந்து நீக்கப்படலாம் !

9972d2c5-7fd5-4922-9c92-82840779e4b7_S_secvpfவங்காளதேசம் நாட்டில் சுமார் 90 சதவீதம் இஸ்லாம் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். 8 சதவீதம் இந்துக்களும், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்த மற்ற பிரிவினர் மிகவும் குறைவாகவும் இருக்கின்றனர். வங்கதேசம் நாட்டில் இஸ்லாம் அரசு மதமாக உள்ளது. 

இந்நிலையில், இஸ்லாம் அரசு மதத்தில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், வங்கதேசத்தில் இஸ்லாமியர் தவிர்த்த இதர பிரிவினர் மீது தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகும். அதிலும் குறிப்பாக ஷியாத் பிரிவு முஸ்லீம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.

இஸ்லாம் மதமானது கடந்த 1988-ம் ஆண்டு முதல் அரசின் மதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இதற்கு தற்போது எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இஸ்லாம் அரசு மதமாக இருப்பது சட்டத்திற்கு விரோதமானது என்று அவர்கள் தரப்பில் கருத்து முன் வைக்கப்படுகிறது.