சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது ? மனம் திறந்தார் டில்ஷான் !

Tillakaratne-Dilshan_Fotor

 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இலங்கை வீரர் டில்ஷான் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டில்ஷான், சந்திமால் அதிரடி காட்டியும் இலங்கை தோற்றது.

இந்தப் போட்டியில் டில்ஷான் 56 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சர் என மொத்தம் 75 ஓட்டங்களும், சந்திமால் 49 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சர் என 58 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

டில்ஷானுக்கு தற்போது 39 வயதாகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அதேசமயம் பலரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர் தொடர்ந்து விளையாடி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய டில்ஷான், “இன்னும் கிரிக்கெட் விளையாடுவதில் நான் மகிழ்ச்சியே அடைகிறேன். என்னால் முடிந்த அளவு நான் தொடர்ந்து விளையாடிக் கொண்டு தான் இருக்கப்போகிறேன்.

அந்த காலக்கட்டத்தில் சிறந்த பங்களிப்பையும் அணிக்கு அளிப்பேன். எனக்கு பதிலாக புதிய வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நான் அப்போதே விலகிக்கொள்வேன்.

டெஸ்டில் நான் நல்ல நிலையில் இருக்கும் போது தான் ஓய்வு பெற்றேன். அப்போது வரை நான் சிறப்பாகவே டெஸ்டில் செயல்பட்டேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே விடைபெற்றேன்” என்று கூறியுள்ளார்.