மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்காக (‘நோட்டா’) தனியாக ஒரு பொத்தான் உள்ளது. ‘நோட்டா’ பொத்தான் கடைசியில் இடம் பெற்று இருக்கும். இந்த ‘நோட்டா’ பொத்தானுக்கு இதுவரை சின்னம் எதுவும் கிடையாது. யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள் அந்த பொத்தானை அழுத்துவார்கள்.
இந்த தேர்தலில் முதன்முதலாக வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டாவுக்கு என்று தனி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தை தேசிய வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கி இருப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து ‘நோட்டா’வுக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.