அணு ஆயுதங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவத்தினருக்கு வடகொரிய அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரிய அதிபரின் உத்தரவு தொடர்பான தகவல்கள் எங்களுக்கும் கிடைத்துள்ளன. கொரிய தீபகற்பத்தில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்.
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளை தவிர்த்து, சர்வதேச சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய அர்ப்பணிப்புகளையும், நிர்பந்தங்களையும் நிறைவேற்ற வடகொரியா முன்வர வேண்டும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.