விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கினால் அது அனைத்து துறைகளிலும் சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் !

விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் வெள்ளையர்களின் உற்பத்திகளை விற்பனை செய்ய சந்தையை ஏற்படுத்தி கொடுப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தரமுல்லை – பெலவத்தையில் உள்ள முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

anura kumara

 

விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கும் பல நாடுகள் உள்ளன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விவசாயிகளுக்கு பெருமளவில் நிவாரணங்களை வழங்கி வருகின்றன.

விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கினால் அது அனைத்து துறைகளிலும் சாதகமான நிலைமையை ஏற்படுத்தும்.

இதனால் ஏற்படும் பயன்கள் நாடு முழுவதும் பகிர்ந்து செல்லும். உணவு உற்பத்திக்கு நிவாரணத்தை வழங்கியே ஆக வேண்டும். அந்த நிவாரணங்களை குறைக்கக் கூடாது எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.