வட கொழும்பு முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கு கடந்த நான்கு தசாப்தங்களாக புரவலர் அல்-ஹாஜ் பாயிக் மக்கின் ஆற்றிய பங்களிப்புஅளப்பறியது என முன்னாள் முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அல்-ஹாஜ் பாயிக் மக்கீனின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் இதனைத் தெரிவத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இவரை நான் சிறு வயது முதல் நன்றாக அறிவேன். இவருடைய தந்தை மர்ஹம் மக்கீன் ஹாஜியார் வட கொழும்பு முஸ்லிம்களின்விடிவுக்காக பல வழிகளில் உழைத்தவர். வட கொழும்பில் பிரபலமான ஹம்ஸா பாடசாலையின் வளர்ச்சிகாக வேண்டியும்முகத்துவாரம் ஜும்ஆ பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக வேண்டியும் தந்தையோடு சேர்ந்து பாயிக் மக்கீன் மற்றும் அவரதுசகோதரர்களும் கடுமையாக உழைத்தனர். வட கொழும்பு முஸ்லிம்கள் மாத்திரமல்ல, ஏனையோர்கள் மத்தியிலும் பிரபலமாகத்திகழ்ந்தவர்.
தாராள மனப்பான்மை கொண்ட பாயிக், அனைத்து நன்மையான விடையங்களுக்கும் வாரி வாரி தன்னுடைய பணத்தைச்செலவழித்தார். அது மட்டுமல்ல, குறிப்பாக இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டு உழைத்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு பலவழிகளிலும் உதவிகளைச் செய்தவர். இலங்கைகளிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மற்றும்இலக்கியத்துறை மாநாடுகளிலும் கலந்து சிறப்பித்தவர். அல் – ஹாஜ் பாயிக் மாக்கீன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரியசொர்க்கமான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக!
எம்.எஸ்.எம்.சாகிர்